பக்கம் எண் :

620

     இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும்.
இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக்
கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.

     2. சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான
வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும்
சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும்,
துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில
வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா
என்று அழைக்கின்றனர்.

     3. சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ,
அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள்
கருதப்படுகின்றன.

     1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்
     2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
     3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
     4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற
        சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
     5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
     6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்

     இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும்
     மாறுபடுகின்றனவாம்.

     நீலநிறம்   - செல்வத்தையும், சுகத்தையும்
     பச்சை     - பலம், தைரியம்
     வெண்மை  - ஞானம், பக்தி, மோட்சம்
     கருப்பு     - புகழ், பெருமை
     புகை நிறம் - துக்கம், தரித்திரம்

     4. சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14
உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங்