பக்கம் எண் :

640

உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை
உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி
லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும்
படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8
மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு
அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள்.
அதன்பிறகு கனி வர்க்கங்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று
கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம்
கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு
(திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.

     4. பக்த மீரா அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில்
பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக்
கலந்தது இந்த தலத்தில் தான். இவளின் கானம் தூணுக்குத் தூண்
எதிரொலித்து கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும்
இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரிலிருந்து பித்துப்
பிடித்தவள் போல் ஓடி வந்த மீரா, எங்கே துவாரகை எங்கே என் நாதன்
என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன்
கோவிற்கதவுகள் தானாகத் திறந்து கொண்டன.

     5. அரண்மனை எவ்வாறு கலகலப்பாக இருக்குமோ அதேபோல் இங்கு
யாத்ரீகர்கள் (பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்) கூட்டம் கூட்டமாக
வருவதால் எந்நேரமும் கலகலப்பு களைகட்டியிருக்கின்றது. இங்கு பெண்கள்
கூட்டங்களையும் அவர்களின் உடைகளையும் பார்க்கும்போது ஆயர்ப்பாடி
கோபிகைகளின் நினைவே நமக்கு வருகிறது. கண்ணன் இருக்கிறான்
கோபியர்கள் இருக்கிறார்கள். ஆநிரைகள் மட்டும் எங்கே சென்றுவிடும்.
இங்கே ஊருக்குள் திரியும் ஆநிரைகளை மக்கள் கண்ணனின்
ஆநிரைகளாகவே அவைகளைத் தொடுவதில் மகிழ்ச்சி கொள்வதும்,
அவைகட்கும் பூச்சூட்டி