| உள்ளதென்றாலும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் உண்டு. தகுந்த வழித்துணையாளர்களோடு நடந்தும் செல்லலாம். பிலம் என்றால் குகை அஹோ என்னும் சொல் சிம்மத்தை குறிப்பது. ஆதலின் வடமொழியில் அஹோபிலமாயிற்று. சிங்கவேள் என்று தூயதமிழால் சுட்டப்பட்டு குன்றத்தையும் சேர்த்து சிங்கவேள் குன்றமாயிற்று. வரலாறு. கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய காட்டுப்பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம் செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக 9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும். மலையடிவாரக் கோவில் இதனைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வர். மூலவர் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். தாயார் அமிர்தவல்லி, செஞ்சுலெட்சுமி உற்சவர் நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான 9 மூர்த்திகள். 8 உற்சவ மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான உற்சவமூர்த்தி மட்டும்தனியாக உள்ளார். இங்குள்ள உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக சேவை சாதிக்கிறார். இவர் சுயம்பு. மாலோல உற்சவர் அஹோபில மடத்தில் அழகிய ஜீயர் சுவாமிகளின் நித்திய திருவாராதன விக்ரகமாக உள்ளார். (இந்த |