பக்கம் எண் :

655

     பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு
பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த
பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து
வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய்
எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில்
உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது
என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

     கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில்
தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது
சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள்
இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின்
கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள்
இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

     அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன்
சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட
இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய்
திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார்
(கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

     திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப்
பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில்