அவ்விடத்திலிருந்தே திருமாலை நினைத்து சிவன் வழிபட, அப்போது திருமால் சிவபெருமானைக் கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழி பட்டால் கபாலம் கையைவிட்டு அகலும் என்று சொல்ல, அவ்வண்ணமே கண்டியூர் வந்து தீர்த்தத்தில் நீராடி எழுந்ததும் கபாலமகன்றது. இவ்வாறு அரன் சாபம் தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள் என்றே இங்கு திருமாலுக்கும் பெயருண்டாயிற்றென்பது வரலாறு. சில நாட்கள் இங்குள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியதாகவும், சற்றே மாறுபட்ட தொனியிலும் இக்கதை பேசப்படுகிறது.சிவனுக்கு கண்டீச்சுவரர் என்று ஒரு பெயர் இருப்பதால் அவர் சாபந்தீர்ந்த நினைவாக கண்டியூர் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவர் ஹரசாப விமோசனப் பெருமாள். நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம் கமல நாதன் என்ற திருப்பெயரும் உண்டு. உற்சவர் உற்சவருக்கும் இரண்டு திருநாமங்கள் பிரதானம். தாயார். கமலவல்லி நாச்சியார் விமானம் கமலாக்ருதி விமானம் தீர்த்தம் 1. கோவிலுக்குச் சற்று மேற்கே இருக்கும் கபால மோட்ச புஷ்கரிணி. 2. கோவிலுக்கு எதிரில் இருக்கும் ஹத்யா விமோசன தீர்த்தம் என்ற பத்ம தீர்த்தம். இதற்கு பலி தீர்த்தம் எனவும் பெயர். காட்சி கண்டவர்கள் 1. சிவபெருமான். 2. அகத்தியர் சிறப்புக்கள் 1. சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக |