153


கருணையை யாது கூறி, சிந்திக்கேன் - மனத்தால் நினைக்க வல்லேன்?

விளக்கம் : 'செம்மையா, வெண்மையா?' - என்ற ஆராய்ச்சி நிறத்தைப்பற்றியது. 'பலவா, ஒன்றா?' என்ற ஆராய்ச்சி, பொருளைப்பற்றியது. 'அணுவா அணுவினும் நுண்மையதா? ' என்ற ஆராய்ச்சி, வடிவைப்பற்றியது. இமையோர்கள் இறைவனை 'எந்நிறத்தினன்? எத்துணையன்? எவ்வடிவினன்?' என்று ஆராய்ச்சி செய்வதால், அவர்களுக்கு இறைவனையடையும் ஆறு விளங்கவில்லை என்பார், "இமையோர் கூட்டம் எய்துமாறறியாத எந்தாய்' என்றார், 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே' என்றார் திருநாவுக்கரசர். ஆயினும், தமக்கு 'வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க்கழல்கள் அவை காட்டி' ஆட்கொண்ட கருணை, சொல்லும் தரத்தினது அன்று என்பார், 'என் சொல்லிச் சிந்திக்கேனே' என்றார். 'அது, அவை' பகுதிப்பொருள் விகுதிகள்.

இதனால், இறைவனை ஆராய்ச்சியினால் காண இயலாது, திருவருளினால்தான் காண இயலும் என்பது கூறப்பட்டது.

25

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மால்அமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.

பதப்பொருள் : நாயினேன் - நாயேனது, சிந்தனை - நினைப்பை, நின்றனக்கு ஆக்கி - நீயே உனக்குரியதாகச் செய்து, கண் இணை - இரு கண்களும், நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி - உன் திருவடி மலருக்கு உரியனவாகச் செய்து, வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி - வணக்ககத்தையும் அம்மலர்க்கே உரியதாகச் செய்த, வாக்கு - வாக்கினை, உன் மணி வார்த்தைக்கு ஆக்கி - உன் அழகிய புகழைப் பேசுவதற்கு ஆக்கி, ஐயம்புலன்கள் ஆர - ஐம்பொறியறிவுகளும் உன்னை நுகரும்படி, வந்தனை - எழுந்தருளி வந்து, ஆட்கொண்டு - அடிமை கொண்டு, உள்ளே புகுந்த - மனத்துள்ளே நுழைந்த, விச்சை - வித்தையுடைய, மால் - யாவரும் விரும்புகின்ற, பெரு - பெரிய, அமுதக் கடலே - அமிர்த சாகரமே, மலையே - மலையே, செந்தாமரைக் காடு அனைய - செந்தாமரைக் காட்டை ஒத்த, மேனி -