154


திருமேனியையுடைய, தனிச்சுடரே - ஒப்பற்ற ஒளியே, இரண்டும் இல் - இம்மை மறுமை இரண்டும் அற்ற, இ - இந்த, தனியனேற்கு - தனியேனுக்கு, உன்னை தந்தனை - உன்னைத் தந்தாய் (உனது கருணையை என்னென்பேன்!)

விளக்கம் : 'சிந்தனை', 'வாக்கு', 'வந்தனை' என்பவற்றால் மனம் வாக்குக் காயங்களைக் கூறினார். முக்கரணங்களையும் தனக்கு உரியனவாக இறைவனே செய்துகொண்டான் என்பதைக் குறிப்பிட்டார். உயிர்களை இறைவழிபாட்டுக்குத் தகுதியாக்குவது இறைவன் செயலே என்பதாகும். 'புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும்' என்ற திருநாவுக்கரசர் வாக்கும் இக்கருத்தை விளக்குவதாகவுள்ளது.

இறைவனது திருவடி தீண்டப்பெறுதலால் மெய்யினுக்கும், திருவடி மலர்ந்தேன் பருகலால் நாவிற்கும், திருமேனி காண்டலால் கண்ணிற்கும், தெய்வ மணம் மோத்தலால் மூக்கிற்கும், பொருள்சேர் புகழ் கேட்டலால் காதிற்கும் ஒருசேர இன்பம் கிடைத்தலால், 'ஐம்புலன்கள் ஆர' என்றார். புலன்கள் என்றது பொறிகளை. முக்கரணங்களையும் தனக்கே உரியனவாகச் செய்து, ஐம்பொறிகளுக்கும் ஒருசேர இன்பம் தருவது அதிசயச் செயல் என்பதைக் காட்ட 'விச்சை' என்றார். ஆழமுடையது கடல்; உயரமுடையது மலை. இறைவன் இரண்டும் உடையவனாதலால் 'கடலே, மலையே' என்றார்.

இறைவனது திருமுகம், திருவாய், திருக்கை, திருவடி முதலியன தாமரை மலர் போன்றிருப்பதால் 'சொந்தாமரைக் காடனைய மேனி' என்றார். அவனது உருவம் ஒளியாதலால் 'சுடரே' என்றார். 'சுடர் விட்டுளன் எங்கள் சோதி' என்றார் திருஞானசம்பந்தரும்.

இதனால், இறைவன் உயிர்களது முக்கரணங்களையும் தன் வயப்படுத்தி அவற்றுக்குத் தன்னையே தருகின்றான் என்பது கூறப்பட்டது.

26

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
முனைவனே முதலந்த மில்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

பதப்பொருள் : முனைவனே - முதல்வனே, தனியனேன் - தனியேனாகி, பிறவி பெரும்பௌவத்து - பிறவியாகிய பெரிய