158


குறிப்பிட, 'எங்கள் சிவபெருமான்' என்றும் யாவர்க்கும் தலைவன் என்பதைக் குறிப்பிட, 'எம்பெருமான்' என்றும் தேவர்களுக்கும் தலைவன் என்பதைக் குறிப்பிட, 'தேவர் கோ' என்றும் மூன்று விளி கொடுத்தார்.

அச்சம், பிறவி வருமோ என்று அஞ்சுவது. தம்மை அடியாரோடு கூட்டி அச்சத்தை நீக்கினான் என்பார், 'அடியார் தம் அடியனாக்கி அச்சந் தீர்த்து' என்றார். அச்சம் தீர்தல் மட்டும் போதாது; பத்தியும் வளர வேண்டும். அதற்கு உள்ளம் உருக வேண்டும். ஆதலின், உள்ளத்தை உருக்கி, பத்தியை வளர்த்தான் என்பார், 'அகநெகவே புகுந்தாண்டான் அன்பு கூர' என்றார். தமது அச்சத்தைப் போக்கி அன்பை வளர்த்தது மாயத் தன்மையானது என்பார், 'விச்சைதான் இதுவொப்பதுண்டோ? என்றார்.

இதனால், களையை நீக்கிப் பயிரை வளர்ப்பது போன்று, அடியார்களுக்கு அச்சத்தை நீக்கி அன்பை வளர்க்கிறான் இறைவன் என்பது கூறப்பட்டது.

29

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தை
யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியா ரடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி ஆடு வோமே.

பதப்பொருள் : தேவர்கோ அறியாத - தேவர்கட்கரசனாகிய இந்திரனும் அறியாத, தேவ தேவன் - மகாதேவன், செழும் பொழில்கள் - வளப்பம் நிறைந்த உலகங்களை, பயந்து - படைத்து, காத்து - காப்பாற்றி, அழிக்கும் - ஒடுக்குகின்ற, மற்றை - மற்றையோராகிய, மூவர் கோன் ஆய் நின்ற - அயன் அரி அரன் என்ற மூவர்க்கும் தலைவனாய் நின்ற, முதல்வன் - ஆதி புருடன், மூர்த்தி - எல்லாப் பொருளும் தன் வடிவமாய் இருப்பவன், மூதாதை - யாவர்க்கும் முதல் தந்தை, மாது ஆளும் - உமாதேவியாரால் ஆளப்பட்ட, பாகத்து - பங்கினையுடைய, எந்தை - எம் தந்தை, யாவர் கோன் - எல்லார்க்கும் தலைவன், வந்து - எழுந்தருளி வந்து, என்னையும் - ஒன்றுக்கும் பற்றாத என்னையும், ஆண்டுகொண்டான் - ஆண்டுகொண்டருளினன்; (ஆதலால்) யாம் - நாம், ஆர்க்கும் - எவர்க்கும், குடி அல்லோம் - அடிமையல்லோம், யாதும் அஞ்சோம் - எதனையும் அஞ்சோம்; அவன் அடியார் அடியாரோடு - அவனுக்கு அடியார்க்