160


பதப்பொருள் : பிணநெஞ்சே - பிணம் போன்ற மனமே, உடையான் கழற்கு - எல்லாவற்றையும் உடையவனது திருவடிக்கு, அன்பு இலை - அன்பு இல்லாதிருக்கிறாய், என்பு உருகிப் பாடுகின்றிலை - எலும்புருகப் பாடுதலும் செய்கின்றிலை, பதைப்பதும் செய்கிலை - மனம் துடிப்பதுமில்லை, கூத்து ஆடுகின்றிலை - கூத்தாடவில்லை, பணிகிலை - வணங்குகின்றாய் இல்லை, பாதமலர் - அவன் திருவடி மலரை, சூடுகின்றிலை - சென்னிமேல் அணிவதில்லை; சூட்டுகின்றதும் இலை - மலர்களை அவனுக்குச் சார்த்துவதும் இல்லை; தேடுகின்றிலை - அவனைத் தேடுவதும் செய்கின்றிலை; தெருவுதோறு அலறிலை - தெருத்தோறும் நின்று அலறுகின்றாய் இல்லை; துணை இலி - அதனால், நீ யாதொரு துணையும் இல்லாய் ஆயினாய்; செய்வது ஒன்று - இதற்குச் செய்யக்கடவதாகிய ஒரு வழியை, அறியேன் - யான் அறிந்திலேன்.

விளக்கம் : ஆடுதல், பாடுதல், சூடுதல், தேடுதல் முதலியன அன்பு வயப்பட்டார் செயல். இச்செயல்களின் மூலம் உயிர் தூய்மை பெறுகிறது. இச்செயல்களைச் செய்யாமையால், 'பிண நெஞ்சே' எனத் தம் நெஞ்சத்தை இழித்துக் கூறினார். சூடுதல் - திருவடியைச் சென்னிமேல் வைத்துக்கொள்ளுதல். சூட்டுதல் - திருவடிக்கு மலரிட்டு வழிபடுதல். இவ்விரு செயல்களும் இன்றும் வடநாட்டுக் கோயில்களில் காணக்கூடியன. 'அலறிலை' என்பது அடிகளது ஆராமையைக் காட்டுகிறது. மனம் ஒருப்படாத போது செயல் நிகழதாதலால், 'செய்வதொன் றறியேனே' என்றார்.

இதனால், உயிர் தூய்மை பெறுவதற்கு ஆடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதன என்பது கூறப்பட்டது.

31

அறிவி லாத எனைப்புகுந் தாண்டுகொண்
டறிவதை யருளிமேல்
நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப்
பந்தனை யறுப்பானைப்
பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா
றாடுதி பிணநெஞ்சே
கிறியெ லாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத்
தாயென்னைக் கெடுமாறே.

பதப்பொருள் : பிணநெஞ்சே - பிணம் போன்ற மனமே, அறிவு இலாத - அறிவற்ற, எனை - அடியேனை, புகுந்து ஆண்டுகொண்டு - எழுந்தருளி வந்து ஆட்கொண்டு, அறிவை அருளி - ஞானத்தைக் கொடுத்தருளி, மேல் நெறி எலாம் - மேலாகிய வீட்டுநெறி முழுவதும், புலம் ஆக்கிய - புலப்படுத்தின, எந்தையை - எம் தந்தையும், பந்தனை அறுப்பானை - பாசத்