173


உன்னைக் கூப்பிடும் ஆற்றல் இல்லேன், ஆனால்; என் கொள்கை - எனது கொள்கையானது, எதிர் ஏற்று வந்து - எதிர்த்து வந்து, தாமரை - தாமரை மலர் போன்ற, தாள் - உன் திருவடிகளை, உறும் - அடைந்த, கூற்றம் அன்னது - எமனது கொள்கையை ஒத்ததாகிய, ஒர் கொள்கை - ஒரு கோட்பாடாகும்.

விளக்கம் : ஆற்றல் மிக்க அன்பாவது, அயரா அன்பாகும். உடம்பினின்றும் உயிரைக் கூறு செய்தலால், எமன் கூற்றம் எனப்பட்டான். எதிர்த்து வந்தும் திருவடி பெற்றான் கூற்றுவன் என்பது, 'ஏற்று வந்தெதிர் தாமரைத்தாள் உறுங் கூற்றம்' என்றதால் விளங்குகிறது.

கூற்றுவன் தாமரைத்தாள் உற்ற வரலாறு:

மிருகண்டு முனிவர், புத்திரன் இல்லாமையால் இறைவனை நோக்கிக் கடுந்தவம் செய்தார். எல்லாக் குணங்களும் நிரம்பப் பெற்றவனாயும், பதினாறு ஆண்டு வாழக்கூடியவனாயும் உள்ள ஒரு புத்திரன் பிறப்பான் என இறைவன் இரங்கி அருளிச் செய்தான். குழந்தையும் பிறந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த குழந்தை மார்க்கண்டேயன் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தான். அவ்வாறு இருக்கும்போது பதினாறு ஆண்டு நிறைவுற்ற பின் ஒரு நாள் எமன் பாசத்தை மார்க்கண்டேயன்மீது வீசினான். அப்பாசம் இறைவன் மேலும் பட்டது. இறைவன் வெகுண்டு எமனை உதைத்தருளினான். மார்க்கண்டேயன் வழிபட்டு வந்து அயரா அன்பினால் அருள் பெற்றான். எமன் எதிர்த்து வந்தும் இறைவன் திருவடிபட்டமையால் அருள் பெற்றான். (கந்தபுராணம்)

இதனால், குற்றமே செய்பவரையும் இறைவன் மறக்கருணையினால் ஆட்கொள்கிறான் என்பது கூறப்பட்டது.

45

கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.

பதப்பொருள் : கள்ளும் வண்டும் அறா - தேனும் வண்டும் நீங்காத, மலர்க்கொன்றையான் - கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், யாவுளும் - எல்லாப் பொருள்களிலும், நள்ளும் - நடுவிலும், கீழுளும் - கீழ்ப்பக்கத்திலும், மேலுளும் - மேற்பக்கதிலும், எள்ளும் எண்ணெயும் போல் - எள்ளில் எண்ணெய் நிறைந்து இருத்தல் போல, நின்ற - இருக்கிற, எந்தையே - எம் அப்பனும் ஆகிய இறைவன், எனை - அன்பு இல்லாத என்னையும், அன்பரின் - தன் அன்பரைப் போல, கூய் - வலிய அழைத்து, பணி கொள்ளும் கில் - அடிமை கொள்ளும் ஆற்றலுடையவன்.