175


செல்வ நல்குர வின்றிவிண் ணோர்புழுப்
புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.

பதப்பொருள் : செல்வம் நல்குரவு - செல்வம் வறுமை என்கிற நிலைவேறுபாடுகள், இன்றி - இல்லாமல், விண்ணோர் - தேவர், புழு புல் - புழு புல் என்ற, வரம்பு இன்றி - பிறப்பு வரையறை இல்லாமல், யார்க்கும் - எல்லோர்க்கும், அரும் பொருள் - அறிதற்கு அருமையான பரம்பொருளினது, எல்லை இல் கழல் கண்டும் - மேன்மைக்கு ஒர் எல்லையில்லாத திருவடிகளைக் கண்டும், பிரிந்தனன் - அவற்றை நீங்கினேன், கல்வகை மனத்தேன் - கல்லின் இனமாகிய மனத்தினையுடையேன், பட்ட கட்டம் - அடைந்த துன்பம் அதுவே.

விளக்கம் : இறைவனைக் காண்பதற்குச் செல்வமும் வறுமையும் காரணம் அல்ல; பிறப்பால் உயர்வும் தாழ்வும் காரணம் அல்ல. அவனைக் காண்பதற்கு அவன் அருளே காரணம். அருளின்றிக் காண முடியாது என்பார், 'யார்க்கும் அரும் பொருள்' என்றார்.

திருவடி என்பது ஞானம். அதற்கு வரம்பு இல்லையாதலால், 'எல்லையில் கழல்' என்றார். ஞானம் நீங்கினால் துன்பம் வந்து தாக்கும் என்பார், 'பட்ட கட்டமே' என்றார்.

இதனால், இறைவனது அருளின்றி ஞானம் பெற முடியாதென்பது, ஞானம் நீங்கினால் துன்பம் வந்து தாக்கும் என்பதும் கூறப்பட்டன.

48

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.

பதப்பொருள் : ஏற்றினை - இடப வாகனத்தை உடைய நீ, கட்டறுத்து - பாசங்களை ஒழித்து, எனை ஆண்டு - என்னை அடிமை கொண்டு, எட்டினோடு இரண்டும் அறியேனை - எட்டினோடு இரண்டின் பொருளையறியாத என்னை, நீறு இட்ட - திருநீற்றை அணிந்த, அன்பரொடு - உன்னடியாரோடு, யாவரும் - எல்லாரும், கண்ணார காண - கண்ணாரக் காணும்படி, பட்டி மண்டபம் - இடமகன்ற உன் திருவோலக்க மண்டபத்தில், ஏற்றினை - ஏறச் செய்தாய்.

விளக்கம் : நீறிட்ட அன்பர் சிவனடியாராவர், 'கண்ணாரக் காண' எனக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. எட்டு என்னும் எண் தமிழில் 'அ' என்றும், 'இரண்டு' என்னும் எண், 'உ' என்றும்