178


இருப்பதானேன் - இருத்தலாயினேன்; ஆதலின், செய்வது - செய்யக்கடவதை, அறியா - உணராத, சிறு - சிறிய, நாயேன் - நாயினேன், செம்பொன் - செம்பொன் போல அருமையாகிய, பாதமலர் - உன் திருவடித் தாமரையை, காணா - காணப் பெறாத, பொய்யர் - பொய்யினையுடையோர், பெறும் பேறு அத்தனையும் - அடையக்கூடிய துன்பப்பேறு முழுவதையும், பெறுதற்கு உரியேன் - அடைதற்குரியேன்.

விளக்கம் : 'அருள் ஆசானோடு வந்த அடியார் உலகப்பற்றை விட்டவராதலின் அவன் அடி சேர்ந்தார்' என்பார், 'பொய்யிலா மெய்யர் வெறிஆர் மலர்ப்பாதம் மேவக் கண்டும்,' என்றார். 'ஆனால், நான் உலகப்பற்றை உடையவன்' என்பார், 'பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன்' என்றார். இறைவன் பற்றைப் பற்றாது உலகப்பற்றைப் பற்றியிருப்பதால், தம்மைச் 'செய்வதறியாச் சிறு நாயேன்' என்று இழித்துக் கூறிக் கொண்டார். உலகப் பற்றினால் விளைவது துன்பந்தான் ஆகையால், 'பொய்யர் பெறும் பேறத்தனையும் பெறுதற்குரியேன்' என்றார்.

இதனால், உலகப்பற்று உள்ளவரைத் துன்பந்தான் மிகும் என்று உணர்ந்து இறைவனது தாளினைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.

52

போரே றேநின் பொன்நகர்வாய் நீபோந் தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டும் கண்கெட்ட
ஊரே றாய்இங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே.

பதப்பொருள்: போர் ஏறே - போர் செய்தலில் வல்ல ஆண் சிங்கம் போன்றவனே, நின் - உனது, பொன் நகர்வாய் - அழகிய சிவபுரத்தினின்றும், நீ போந்தருளி - நீ எழுந்தருளி, வார் ஏறு - கச்சார்ந்த, இளமென் முலையாளோடு உடன் வந்து - இளமையும் மென்மையுமுள்ள தனங்களையுடைய உமாதேவியோடு கூடவந்து, இருள் நீக்கி - அஞ்ஞான இருளை நீக்கி, அருள - அருள் செய்ய, அருள் பெற்ற - உன் திருவருளைப் பெற்ற, சீர் ஏறு அடியார் - சிறப்பு மிகுந்த உன்னடியார், நின்பாதம் - உன் திருவடிகளை, சேரக் கண்டும் - அடைவதை நேரே பார்த்திருந்தும், கண்கெட்ட - கண்ணையிழந்த, ஊர் ஏறு ஆய் - ஊர்க்காளை போல, இங்கு உழல்வேனோ - இவ்வுலகிலே திரிவேனோ? கொடியேன் உயிர்தான் உலவாது - தீவினையேனது உயிரும் நீங்கவில்லை.

விளக்கம் : துன்ப நீக்கம் முன்பும் இன்பப் பேறு பின்பும் உண்டாமாதலால், 'இருள்நீக்கி யருள' என்றார். சத்தியின் துணை கொண்டே இருள் நீக்கியருள்வான் ஆதலின், 'வாரே