197


இதனால், இறைவனே இரங்கி அருள் புரிந்தாலன்றி இறைவனை அடைதல் அரிது என்பது கூறப்பட்டது.

77

ஈச னேநீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசி னேன்ஒர் பேதம் இன்மை பேதை யேன்என் எம்பிரான்
நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம லாவொர் நின்னலால்
தேச னேயோர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே.

பதப்பொருள்: ஈசனே - ஆண்டவனே, என் எம்பிரான் - என் தலைவனே, நீசனேனை ஆண்டுகொண்ட - புலையனாகிய என்னை ஆண்டு கொண்ட, நின்மலா - மாசற்றவனே, தேசனே - ஒளி உருவனே, இங்கு அங்கும் - இகத்தும் பரத்தும், நீ அல்லது - உன்னை அன்றி, இல்லை என்பதும் - யாதும் இல்லை என்னும் அதனையும், ஓர் பேதமின்மை - சிறிதும் வேறுபாடின்றி, பேதையேன் பேசினேன் - அறிவில்லாத நான் எடுத்து நாவினால் சொன்னேன், சிந்தை - எனது மனமும், ஓர் நின் அலால் - ஒப்பற்ற நின்னை அன்றி, ஓர் தேவர் உண்மை - பிறர் ஒரு கடவுளர் உண்டு என்று, சிந்தியாது - நினைக்க மாட்டாது.

விளக்கம்: இம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் தருபவன் இறைவனேயன்றிப் பிறர் அல்லர் ஆகையால், 'நீ அல்லதில்லை இங்கும் அங்கும்' என்றார். 'பேதம் இன்மை' என்பதற்கு, 'பேதம் இன்மை உண்டாக' எனப் பொருள் கொள்க. நாவினால் பேசியதோடு, மனமும் வேறு கடவுளரை நினைக்காது என்பார், 'ஓர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே' என்றார். 'உற்றவரும் உறுதுணையும் நீயே' என்றும், 'உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன்' என்றும் கூறிய திருநாவுக்கரசர் வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க. 'எனக்கு உன் திருவருளைக் கொடுத்தருள் வாயாக' என்பது குறிப்பு.

இதனால், இறைவனே இகமும் பரமும் தருவான் என்று தெளிந்து, அவனை மனத்தால் நினைந்து, மொழியால் வாழ்த்த வேண்டும் என்பது கூறப்பட்டது.

78

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களால்
முந்தை யான காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன்
வெந்தை யாவி ழுந்தி லேன்என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்த லுற்றி ருப்பனே.

பதப்பொருள்: சிந்தை செய்கை கேள்வி வாக்கு - உலகியலில் செல்கின்ற நினைவு, செயல், கேள்வி, சொல், சீர் இல் ஐம்புலன்களால் - சிறப்பில்லாத ஐம்பொறிகள் ஆகிய இவை காரணமாக, முந்தை ஆன காலம் - முற்காலத்தில், நின்னை - உன்னை, எய்திடாத - அடைந்திடாத, மூர்க்கனேன் - மூடனாகிய