208


பதப்பொருள் : மை இலங்கு - மை விளங்குகின்ற, நல்கண்ணி பங்கனே - நல்ல கண்ணையுடைய மாதை ஒரு கூற்றிலுடையவனே, வந்து - குருவாய் எழுந்தருளி வந்து, எனைப் பணிகொண்ட பின் - அடியேனை ஆட்கொண்டருளிய பின்னர், உனை - உன்னை, மழக்கை இலங்கு - குழந்தையின் கையிலே விளங்குகின்ற, பொன் கிண்ணம் என்று அலால் - பொற் கிண்ணத்தை எளிமையாக எண்ணுவது போல எண்ணுகின்றேன் அல்லாமல், அரியை என்று - கிடைத்தற்கு அருமையான பொருளாவாய் என்று, கருதுகின்றிலேன் - நினைக்கின்றிலேன்; மெய் இலங்கு - திருமேனியில் விளங்குகின்ற, வெள் நீற்று மேனியாய் - வெண்மையான திருநீற்றின் ஒளியையுடையாய், மெய்ம்மை அன்பர் - உண்மையான அன்பர்கள், உன் மெய்ம்மை மேவினார் - உன்னுடைய அழிவில்லாத திருவடி இன்பத்தைப் பெற்றனர்; பொய் இலங்கு எனை - பொய்மை மிகுந்த என்னை மட்டும், புகுத விட்டு - இவ்வுலகிலே புகும்படி விட்டு, நீ போவதோ பொருத்தமாவது - நீ எழுந்தருளுதல்தானோ உனக்குப் பொருத்தம் ஆன செயல்? சொலாய் - சொல்லியருள்வாயாக.

விளக்கம் : குழந்தை அறியாமையால் பொற்கிண்ணத்தை எளிமையாக எண்ணும்; அதைப் போல, யானும் அறியாமையால் உன்னை எளிமையாக எண்ணிவிட்டேன் என்பார், 'மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றலால்' என்றார். குழந்தை பொற் கிண்ணத்தை அரிதின் முயன்று பெற்றதன்று; தாய் விரும்பிக் கொடுத்தது. அதனால், அதன் அருமை தெரியாது. அதைப் போல யான் உன்னை அரிதின் முயன்று பெறவில்லை. நீயே விரும்பிக் காட்சி கொடுத்தாய். ஆதலின், உன் அருமை தெரிகிலேன் என்பார், 'அரியை என்றுனைக் கருதுகின்றிலேன்' என்றார்.

இதனால், இறைவன் திருவடிப் பெருமையினை உணர்ந்த மெய்யடியார்கள் பேரின்பம் பெறுவார்கள் என்பது கூறப்பட்டது.

92

பொருத்தம் இன்மையேன் பொய்மை உண்மையேன்
போத என்றெனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டி லேன்மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்
வம்ப னேன்வினைக் கிறுதி இல்லையே.

பதப்பொருள் : கமல மலர்ப்பாதனே - தாமரை மலர் போன்ற பாதத்தை உடையவனே, அரத்த மேனியாய் - சிவந்த