விளக்கம் : மத்தால் கடையப்படும் தயிர் சுழல்வது போல, மலங்களால் அலைக்கப்படும் உயிர் சுழலும் என்பார், 'மலங்கள் ஐந்தாற் சுழல்வன் பொருமத்துறவே' என்றார். இங்கு, உவமையிலும் 'சுழலுதல்' என்பது கூட்டி உரைக்கப்பட்டது. இனி, மத்தின் அசைவு நின்றால்தான் தயிரின் சுழற்சி நிற்கும். அது போல, மலவாதனை நீங்கினால்தான் உயிர் அமைதியுறும் என்பதும் இதனால் விளங்குகிறது. ஐந்து மலங்களாவன: ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்பன. ஆணவம் அறிவை மயக்கும். கன்மம் ஆன்மாவுக்கு இன்ப துன்பத்தைக் கொடுக்கும். மாயை தநுகரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். மாயேயம் தநுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். திரோதாயி மலத்தின் வழிநின்று அறிவை மறைக்கும். இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவைப் பந்திக்கும். இவற்றையே குற்றம் என்றார். இதனால், மலவாதனையால் உண்டாகும் சுழற்சியை நீக்கி அருளுவான் இறைவன் என்பது கூறப்பட்டது. 29 மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி சச்சையனே. பதப்பொருள் : வெள்தலை மிலைச்சி - வெண்டலை மாலையை அணிந்து, கொத்து உறுபோது மிலைந்து - கொத்துகளாகப் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி, குடர் நெடுமாலை சுற்றி - குடல்களாகிய நெடிய மாலையைச் சுற்றி, தத்துறு - பரவின, நீறுடன் - திருவெண்ணீற்றுடன், ஆரச் செஞ்சாந்து அணி - சந்தனத்தின் செம்மையான சாந்தினை அணிந்த, சச்சு ஐயனே - இளமையையுடைய தலைவனே, புலன் தீக்கதுவ - புலன்களாகிய நெருப்புப்பற்ற, மத்து உறு தண் தயிரிற்கலங்கி - மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, (அக்கலக்கத்தில்) வித்துறுவேனை - வேரூன்றுவேனை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : தாருகாவனத்து முனிவர்கள் கோபம் காரணமாக இறைவனை அழிக்க எண்ணிக் கொடிய வேள்வி ஒன்று இயற்றி அதிலிருந்து தோன்றிய வெண்டலை ஒன்றை ஏவினர். அதனை இறைவன் கையினால் பற்றித் தலையில் சூடினான் ஆதலின், 'வெண்டலை மிலைச்சி' என்றார். பிரமன் முதலிய தேவர்கள் அழிவில் அவர்தம் எலும்பு முதலியவற்றைக் கோத்து மாலையாக அணியும்போது அவற்றின் இனமாய குடரையும் அணிந்தனன் என்பார், 'குடர் நெடுமாலை சுற்றி' என்றார். இவ்வாறு நிகழ்ச்சிகளும் இறைவன் என்றும் அழியாதவன்
|