243


அரைசே - அரசனே, விரைசேர் - மணம் பொருந்திய, முடியாய் முடியினையுடையவனே, வரை சேர்ந்து அடர்ந்தென்ன - மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, வல்வினை - கொடிய வினைப்பயன்கள், வந்து அடர்வன - வந்து தாக்குகின்றன; அறியாச் சிறியேன் பிழைக்கு - அறிவில்லாத சிறியேனது குற்றத்திற்குத் தீர்வாக, அஞ்சல் என்னின் அல்லால் - அஞ்சற்க என்று நீ அருள் செய்தாலன்றி, விடுதி - விட்டுவிடுவாயோ?

விளக்கம் : திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை நோக்கித் திருமகள் தவங்கிடந்து வரம் பெற்றுத் திருமாலை மணந்தாள் ஆதலின், 'திரை சேர் மடந்தை மணந்த திருப் பொற்பதப்புயங்கா' என்றார். 'திரை சேர் மடந்தை' என்பதற்குக் கங்காதேவியைக் கொள்வாரும் உளர்.

பிழைக்கு என்பதைப் பிழையின் நீக்கத்துக்க எனக் கொள்ளல் வேண்டும். 'துன்பத்திற்கியாரே துணையாவார்' என்ற வள்ளுவர் வாய்மொழிக்குத் 'துன்ப நீக்கத்துக்கு யாரே துணையாவார்' என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.

இதனால், வினைக் கூட்டங்களை அழித்து அஞ்சேல் என்று அருள வல்லவன் இறைவன் என்பது கூறப்பட்டது.

37

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

பதப்பொருள் : விரிந்து எரியும் - பரந்து எரிகின்ற, சுடர் அனையாய் - நெருப்பை ஒத்தவனே, சுடுகாட்டு அரசே - சுடுகாட்டின் அரசனே, தொழும்பர்க்கு அமுதே - தொண்டர்க்கு அமுதமே, தொடர்வு அரியாய் - அணுகுதற்கு அரியவனே, தமியேன் - தமியேனது, தனி நீக்கும் - தனிமையை நீக்குகின்ற, தனித்துணையே - ஒப்பற்ற துணையே, அடர்புலனால் - வருத்துகின்ற புலன்களால் நின் பிரிந்து அஞ்சி - உன்னைப் பிரிந்து அஞ்சி, அஞ்சொல் நல்லார்தம் - இன்சொற்களையுடைய மாதர்களது, விடர்விடலேனை - மயக்கினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : சுடுகாடு என்பது, எல்லாம் ஒடுங்கிய இடம். அடியார்களுக்கு ஒப்பற்ற துணையாய் இருப்பவன் இறைவன் என்பதை, 'பொது நீக்கித்தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையை' என்ற திருநாவுக்கரசர் திருவாக்கிலும் காணலாம். ஐம்புல ஆசை ஈர்க்கும் தன்மையது ஆதலின், 'அடர் புலன்' என்றார். இறைவனைப் பிரிந்தமையின் அச்சம் உண்டாயிற்று என்பார், 'நிற்பிரிந்தஞ்சி என்றார், மாதரார்