258


நகையாய்’ என்று விளித்தனர். கொச்சை மொழியையுடைய இளம் பெண்களாதலின், ‘வண்ணக் கிளி மொழியார்’ ஆயினர். ‘விண்ணுக்கு ஒரு மருந்தை’ என்றமையால், இறைவனது கருணையும் ‘வேத விழுப்பொருள்’ என்றமையால் அவனது பெருமையும், ‘கண்ணுக்கு இனியான்’ என்றமையால் அவனது அழகும் விளங்குகின்றன. விளங்கவே, அவனை நினைத்து உருகுதல் இன்றியமை யாதது ஆதலின், ‘உள்ளம் உள் நெக்கு நின்று உருக’ என்றும், உடன் வந்தவர்களை எண்ணிக்கொண்டிருந்தால் காலம் வீணே கழியுமாதலின், ‘யாம் மாட்டோம்’ என்றும் கூறினர்.

இதனால், இறைவனது பெருமையிலும் அழகிலும் ஈடுபட்டோர் உருகுவார் என்பது கூறப்பட்டது.

4

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : மால் அறியா - (அடியைத்) திருமால் அறிய முடியாத, நான்முகனும் காணா - (முடியைப்) பிரமன் காணக்கூடாத, மலையினை - அண்ணாமலையை, நாம் அறிவோம் என்று - நாம் அறியக்கூடும் என்று, உள்ள பொக்கங்களே பேசும் - உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் ஊறு - பால் சுரக்கின்ற, தேன்வாய் - தேன் போல இனிக்கும் வாயினையுடைய, படிறீ - வஞ்சகீ, கடை திறவாய் - வாயிற் கதைவைத் திறப்பாயாக, ஞாலமே விண்ணே பிறவே - இந்நிலவுலகினரும் வானுலகினரும் பிற உலகினரும், அறிவு அரியான் - அறிவதற்கு அருமை யானவனது, கோலமும் - அழகையும், நம்மை ஆட்கொண்டருளி - நம்மை அடிமை கொண்டருளி, கோதாட்டும் - குற்றத்தை நீக்கிச் சீராட்டும், சீலமும் - பெருங்குணத்தையும், பாடி - வியந்து பாடி, சிவனே சிவனே என்று - சிவனே சிவனே என்று, ஓலம் இடினும் - முறையிடினும், உணராய் - அறியாய், உணராய் - துயில் நீங்காதிருக்கிறாய், ஏலக் குழலி பரிசு - இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை.

விளக்கம் : ‘மாலறியா’ என்றும், ‘நான்முகனுங்காணா’ என்றும் கூறியவற்றால், இறைவனைத் தெளிவு இல்லாதவர்களும், ஒருமுகப்படாதவ வர்களும் காண இயலாது என்பது விளங்கு