259


கின்றது. போல், அசை. எழுப்பப்பட்ட பெண்ணின் சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருத்தலின், அவளைப் ‘படிறீ’ என்றனர். இறைவனிடம் அன்பு செலுத்துவோர், அவனது உருவத்திருமேனியை நினைந்து அவனது அருட்செயல்களைப் பாடுவர் என்பது ‘கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடி’ என்றதனால் தெரிகின்றது. ‘ஏலக்குழலி’ என்றதனால், கூந்தலை அலங்கரித்துக்கொள்பவள் என்பதைச் சுட்டினர்.

இதனால், இறைவனை ஊனக்கண்ணால் காண முடியாது என்பதும், அருட்கண்ணால் காணலாம் என்பதும் கூறப்பட்டன.

5

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : மானே - பெண்ணே, நீ - நீ, நென்னல் - நேற்று, நாளை வந்து - நாளைக்கு வந்து, உங்களை - உம்மை, நானே எழுப்புவன் என்றலும் - நானே துயிலினின்றும் எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், நாணாமே - வெட்கப்படாமல், போன திசை - நீ போன திக்கை, பகராய் - சொல்வாய், இன்னம் புலர்ந்தின்றோ - இன்னும் பொழுது விடியவில்லையோ? வானே நிலனே பிறவே - வானுலகத்தவரும் நிலவுலகத்தவரும் பிறவுலகத்தவரும், அறிவு அரியான் - அறிவதற்கு அருமையானவன், தானே வந்து - தானாகவே வலிய வந்து, எம்மைத் தலையளித்து - எம்மைக் காத்து, ஆட்கொண்டருளும் - அடிமை கொண்டருள்கின்ற, வான் - மேலாகிய, வார் - நெடிய, கழல் பாடி - கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தோர்க்கு - வந்தவர்களாகிய எங்களுக்கு, உன் வாய் திறவாய் - நீ உன் வாய் திறவாது இருக்கிறாள், ஊனே உருகாய் - உடலும் உருகப்பெறாது இருக்கிறாய், உனக்கே உறும் - இவ்வொழுக்கம் உனக்குத்தான் பொருந்தும், எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனை - எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப்பவனை, பாடு - எழுந்த வந்து பாடுவாயாக.

விளக்கம் : எழுப்பப்பட்டவள் மயக்கமுடையவள் என்பதைக் காட்ட, ‘மானே’ என்று அழைத்தனர். ‘நென்னலை’ என்பதிலுள்ள ஐகாரம் சாரியை. நாளை வந்து எழுப்புவன் என்று சொன்னபடி