260


நடவாமல் தூங்கிக் கொண்டிருத்தல் நாணம் தரத்தக்க செயலாம். சொல் வேறு, செயல் வேறாக இருப்பவர்களுக்கு இவையெல்லாம் தகுமாதலின், ‘உனக்கே உறும்’ என்றார்கள். ஆனால், சொல்லும் செயலும் ஒத்துள்ள அவர்கள் இறைவன் புகழ் கேட்க விரும்பி, ‘எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாட’ என்றார்கள்.

இதனால், இறைவன், பாடி மனங்குழையும் அன்பர்க்குத் தானே எளிவந்தருளுவன் என்பது கூறப்பட்டது.

6

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : அன்னே - தாயே, இவையும் சிலவோ - உன் குணங்களில் இவையும் சில போலும், பல அமரர் - பல தேவர்கள், உன்னற்கு அரியான் - நினைத்தற்கு அரியவனும், ஒருவன் - ஒப்பற்றவனும், இருஞ்சீரான் - பெருஞ்சிறப்பையுடையவனுமாகிய இறைவனைப்பற்றிய, சின்னங்கள் கேட்ப - சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவன் என்றே வாய் திறப்பாய் - சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய், தென்னா என்னா முன்னம் - தென்னவனே என்று சொல்லுவதற்கு முன்பே, தீசேர் மெழுகு ஒப்பாய் - தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய், என் ஆனை - எனது பெருந்துணைவன், என் அரையன் - எனது அரசன், இன் அமுது - இன்னமுதானவன், என்று - என்று, எல்லோமும் வெவ்வேறாய்ச் சொன்னோம் - யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந்தோம், கேள் - நீ கேட்பாயாக, இன்னம் துயிலுதியோ - இன்னமும் உறங்குகின்றனையோ? வல் நெஞ்சப் பேதையர் போல் - திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, வாளா கிடத்தி - சும்மா படுத்திருக்கின்றாயே, துயிலின் பரிசு என் - தூக்கத்தின் சிறப்புதான் என்னென்று உரைப்பது?

விளக்கம் : ‘அன்னே’ என்று விளித்தது அன்பினாலாம். ‘இவையும் சிலவோ’ என்றது எழுப்பப்பட்ட பெண்ணின் மாறுபட்ட குணங்களை. மாறுபாடாவது, ‘தென்னா’ என்று ஒரு முறை கூறியதுமே தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுபவள் ‘என்னானை என்னரையன் இன்னமுது’ என்று மும்முறை கூறியும் வாளா