கணவர் சொற்படி செய்தலே பெண்டிர்க்குக் கற்பாகும் ஆதலின், ‘அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’ என்றும் கூறினர். இது, கன்னிப் பெண்கள் ஒருங்கு கூடிச் சிறப்புப் பயனாகிய நல்ல அடியாரைக் கணவராகப் பெறுதல் வேண்டும் என்று பாடியது. இதனால், அடியார் பணியின் பெருமை கூறப்பட்டது. 9 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். பதப்பொருள் : பாதமலர் - இறைவன் திருவடிக் கமலங்கள், பாதாளம் ஏழினும் கீழ் - கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல் கழிவு - சொல்லுக்கு அளவுபடாதனவாய் இருக்கும்; போது ஆர் புனை முடியும் - மலர்கள் நிறைந்த அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், எல்லாப் பொருள் முடிவு - மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; திருமேனி ஒன்றல்லன் - அவன் திருமேனி ஒரே வகையானவன் அல்லன்; ஒருபால் பேதை - ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதல் - வேத முதலாக, விண்ணோரும் மண்ணும் - விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும், துதித்தாலும் - புகழ்ந்தாலும், ஓத உலவா - சொல்லுதற்கு முடியாத, ஒரு தோழன் - ஒப்பற்ற நண்பன்; தொண்டர் உளன் - அடியார் நடுவுள் இருப்பவன்; அரன்தன் - அத்தன்மையனாகிய சிவபெருமானது, கோயில் - ஆலயத்திலுள்ள; கோது இல் குலத்து - குற்றமில்லாத குலத்தையுடைய, பிணாப்பிள்ளைகாள் - பணிப் பெண்களே, அவன் ஊர் ஏது - அவன் ஊர் யாது? உற்றார் ஆர் - அவனுக்கு உறவினர் யாவர்? அயலார் ஆர் - அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் பரிசு ஏது - அவனைப் பாடும் வகை யாது? விளக்கம் : பாதாளம் ஏழினுங்கீழ் திருவடி என்றும், எல்லாப் பொருள் முடிவே திருமுடி என்றும் இறைவனது அளக்கலாகா அளவும் பெருமையுங் கூறினார். இறைவன் திருமேனியின் ஒரு பாகத்தில் அம்மையையுடைய வனாதலின், (ஒரு வடிவத்தில் ஆண்மையும் பெண்மையும் தோன்ற இருப்பவன் ஆதலின்), ‘திருமேனி ஒன்றல்லன்’ என்றும், இறைவன் வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்ததானாதலின்,
|