267


சத்திக்கவும், சிலம்பு கலந்த ஆர்ப்ப - காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும், கொங்கைகள் பொங்க - தனங்கள் பூரிக்கவும், குடையும் புனல் பொங்க - முழுகுகின்ற நீர் பொங்கவும், பங்கயப் பூம்புனல் - தாமரை மலர்கள் நிறைந்த நீரில், பாய்ந்து ஆடு - பாய்ந்து ஆடுவாயாக.

விளக்கம் : பொய்கையானது, கருங்குவளை மலரையுடைத்தாதலின் எம்பிராட்டி திருமேனி போன்றும், செந்தாமரை மலரையுடைத்தாதலின், எம்பிரான் திருமேனி போன்றும் இருந்தது. ‘குருகு’ என்பது, சிலேடையால் வளையலையும், பறவையையும் குறித்தது. ‘அரவம்’ என்பதும், அவ்வாறே பாம்பையும் ஒலியையும் குறித்தது. மடு, குருகினத்தை உடைமையால் எம்பிராட்டி போன்றும், அரசத்தை உடைமையால் எம்பிரானைப் போன்றும் இருந்தது என்க. பைங்குவளைக் கார் மலரையும் செங்கமலப் பைம்போதினையும் கண்ட அடிகட்கு, அம்மையப்பரது காட்சியே தோன்றியதால், இவ்வாறெல்லாம் சிலேடை முறையால் மடுவைப் புனைந்துரைத்தருளினார். கன்னிப் பெண்கள் நீராடிய போது பொய்கையை அம்மையப்பராகக் கண்டு பாடியபடியாம்.

இதனால், எப்பொருளையும் இறைவனாகக் காணுதலே சிறப்பு என்பது கூறப்பட்டது.

13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : காது ஆர் குழை ஆட - காதில் பொருந்திய குழை அசையவும், பைம்பூண் கலன் ஆட - பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும், கோதை குழல் ஆட - பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட - மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், சீதப்புனல் ஆடி - குளிர்ச்சியாகிய நீருள் மூழ்கி, சிற்றம்பலம் பாடி - தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருள் பாடி - வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் ஆம் ஆ பாடி - அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணமும் பாடி, சோதி திறம் பாடி - பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, சூழ் கொன்றைத்தார் பாடி - இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, ஆதி திறம் பாடி - அவன் ஆதியான