268


தன்மையைப் பாடி, அந்தம் ஆம் ஆபாடி - அவன் அந்தமான முறையையும் அந்தம் ஆம் ஆ பாடி - அவன் அந்தமான முறையையும் பாடி, போதித்து - பக்குவ முறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை வளர்த்து எடுத்த - நம்மை வளர்த்து மேம்படுத்திய, பெய்வளை தன் - இடப்பட்ட வளையலை உடைய உமாதேவியின், பாதத் திறம் பாடி - திருவடியின் தன்மையைப் பாடி, ஆடு - ஆடுவாயாக.

விளக்கம் : இளம்பெண்டிர் நீரில் வேகமாகக் குடைந்தாடுவார் களாதலின், காதார் குழையாடுதல் முதலியவை நிகழ்வனவாயின. நீருள் மூழ்கும் போது கூந்தல் மலரில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுள் மேலெழுமாதலின், ‘கோதை குழலாட வண்டின் குழாமாட’ என்பதுங் கூறப்பட்டது. ‘சோதி திறம்பாடிச் சூழ் கொன்றைத் தார்பாடி’ என்றமை, இறைவனது வடிவத்தையும், ‘ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி’ என்றமை, இறைவனது தன்மையையும் பாடியபடியாம்.

இறைவனது அருட்சத்தியே ஆன்மாக்களுக்குப் பக்குவம் வந்த காலத்துச் சிவத்தை அடைவிக்குமாதலின், ‘பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்றனர். இது நீராடுங்கால் கன்னிப் பெண்கள் இறைவன் புகழ் பாடிய படியாம்.

இதனால், இறைவனது அருட்சத்தியின் உபகாரம் கூறப்பட்டது.

14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

பதப்பொருள் : வார் உருவம் - கச்சணிந்த அழகிய, பூண்முலையீர் - அணியுடன் கூடிய கொங்கைகளை உடையீர், ஓரொருகால் - ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்றென்றே - எம்பெருமான் என்று சொல்லி வந்து, இப்பொழுது, நம்பெருமான் - நம் இறைவனது, சீர் - பெருமையை, ஒருகால் - ஒருகாலும், வாய் ஓவாள் - வாயினால் கூறுதலை நீங்காதவளாகிய இவள், சித்தம் களிகூர - மனம் மகிழ்ச்சி மிக, கண் - விழிகளினின்றும், ஒருகால் ஓவா - ஒரு பொழுதும் நீங்காத, நீர் நெடுந்தாரை பனிப்ப - நீரின் நீண்ட தாரைகள் ஒழுக, பார் - பூமியின்மேல், ஒருகால் வந்தனையாள் - ஒரு முறையே வீழ்ந்து