எழாது வணங்குவாள், விண்ணோரைத் தான் பணியாள் - பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள், பேர் அரையற்கு - பெரிய தலைவனாகிய இறைவன்பொருட்டு, ஒருவர் பித்து ஆம் ஆறும் - ஒருவர் பித்தராகுமாறும், இங்ஙனே - இவ்வாறோ? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் - இவ்வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர், ஆர் ஒருவர் - யார் ஒருவரோ அவருடைய, தாள் - திருவடியை, நாம் வாயாரப் பாடி - நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, ஏர் உருவம் - அழகிய தோற்றமுடைய, பூம்புனல் - மலர்கள் நிறைந்த நீரில், பாய்ந்து ஆடு - நீ குதித்த ஆடுவாயாக. விளக்கம் : இறைவனிடத்தில் அன்பு செலுத்தப்பெற்றவர்களுக்கு அவ்வன்பு முதலில் சிறிது சிறிதாய் வளர்ந்து, பின்பு பேரன்பாய் முதிரும். ஆதலின், ‘ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே’ என்றனர். ‘எம்பெருமான் சீரொருகால் வாயோ வாள்’ என்றதும், ‘சித்தங்களிகூர’ என்றதும், ‘பாரொருகால் வந்தனையாள்’ என்றதும், முறையே வாக்கு, மனம், காயம் தம் வயம் இழந்து, இறைவன் வயமாயினமையைக் குறித்தன. கண்களில் நீர் பெருகுதலும் காயத்திலே தோன்றும் மெய்ப்பாடாம். ‘பாரொருகால் வந்தனையாள்’ என்றதற்கு, பூமியில் ஒருமுறை வந்தாற்போல் பவள் என்றும் பொருள் கொள்ளலாம். இப் பொருளால், ஞானநிலையில் நிற்போர் உலக நிலைக்கு ஒவ்வொரு சமயந்தான் வருவார் என்பது விளங்கும். பித்து - பேரன்பு. நீராடுங்கால் அன்பு நிறைந்த ஒரு பெண்ணின் நிலையைக் காட்டி, அந்நிலையை நாமும் பெறுவோமாக என்று பிற பெண்கள் கூறிக்கொண்டபடியாம். முதலிற்பலர் தம்முள் பேசி, இறுதியில் ஒருத்தியை நோக்கிக் கூறியதாக இது செய்யப்பட்டது. இதனால், பக்குவம் நிறைந்த அடியார் தம் வயமிழந்து இருப்பர் என்பது கூறப்பட்டது. 15 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். பதப்பொருள் : மழை - மேகமே, முன் - முதலில், இக்கடலைச் சுருக்கி - இந்தக் கடல்நீரை உட்கொண்டு, எழுந்து - மேல் எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து - எம்மையுடை
|