யாளாகிய அம்மையினது திருமேனி போல நிறத்தோடு விளங்கி, எம்மை ஆளுடையாள் - எம்மை அடிமையாகவுடையவளது, இட்டு இடையின் மின்னிப் பொலிந்து - சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் - எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த, பொன்னஞ் சிலம்பிற்சிலம்பி - பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, திருப்புருவம் என்ன - அவளது திருப்புருவம் போல, சிலை குலவி - வானவில்லிட்டு, நம்தம்மை ஆளுடையாள் - நம்மை அடிமையாக உடையாளாகிய, தன்னில் பிரிவிலா - அவ்வன்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கோமான் - எங்கள் தலைவனாகிய இறைவனது, அன்பர்க்கும் - அடியார்களுக்கும், நமக்கும் - பெண்களாகிய நமக்கும், அவன் முன்னி - அவள் திருவுளங்கொண்டு, முன் சுரக்கும் இன் அருளே என்ன - முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று, பொழியாய் - பொழிவாயாக. விளக்கம் : அம்மையினது திருமேனி நீல நிறமாகும். பெண்களது இடைக்கு மின்னலை உவமையாகக் கூறுவது மரபு. இறைவன் அம்மையின் மூலமாகத்தான் உயிர்களுக்கு அருளுவானாதலின், ‘அவள் அன்பர்க்கும் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே என்ன’ என்றனர். இது, நீராடச் சென்ற பெண்டிர் பொதுப்பயனாகிய மழையை வேண்டிப் பாடியபடியாம். இதனால், இறைவன் சத்தி மூலமாக மெய்யடியார்களுக்கு அருளை வழங்குவான் என்பது கூறுப்பட்டது. 16 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். பதப்பொருள் : கொங்கு உண் கருங்குழலி - மணம் பொருந்திய கரிய கூந்தலையுடைய பெண்ணே, செங்கணவன்பால் - சிவந்த கண்ணையடைய திருமாலினிடத்தும், திசைமுகன்பால் - நான்முகனிடத்தும், தேவர்கள்பால் - பிற தேவர்களிடத்தும், எங்கும் - மற்றெவ்விடத்தும், இலாதது - இல்லாததாகிய, ஓர் இன்பம் - ஒப்பற்ற ஆனந்தம், நம்பாலது ஆ - நம்மிடத்து ஆகும்படி, நந்தம்மைக் கோதாட்டி - நம்மைப் பெருமைப் படுத்தி, இங்கு நம் இல்லங்கள்தோறும் - இவ்வுலகிலே நம் வீடுகள்
|