287


- தேவர்களாகியும், ஏனைப் பிறவி ஆய் - மற்றைப் பிறவிகளாயும், பிறந்து இறந்து - பிறந்தும் இறந்தும், எய்த்தேனை - இளைத்தேனை, ஊனையும் நின்றுருக்கி - உடம்பினையும் உருகச் செய்து, என் வினையை ஓட்டுகந்து - என் வினைகளை ஓட்டுதலை விரும்பி, தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து - தேனையும் பாலையும் கருப்பஞ்சாற்றினையும் நிகர்த்து, இனிய கோனவன் போல் வந்து - இனிமையைத் தருகின்ற தலைவனைப் போல வந்து, என்னை - அடியேனை, தன் தொழும்பில் கொண்டருளும் - தன் தொண்டினுக்கு உரியனாக்கும், வானவன் - மேலானவனது, பூங்கழலே - தாமரை போலும் திருவடிகளின் புகழையே, அம்மானாய் - அம்மானைப் பாட்டாக, பாடுதும் - பாடுவோமாக.

விளக்கம் : ‘ஏனைப் பிறவாய்’ மரம் செடி கொடி முதலியவற்றை. ‘புல்லாகிப் பூடாய்’ எனச் சிவபுராணத்துள் கூறியதை நினைவு கொள்க. ‘பிறவியாய்’ என்பது, ‘பிறவாய்’ எனக் குறைந்து நின்றது. ஓட்டு - முதல்நிலைத் தொழிற்பெயர்; ஓட்டுதலைக் குறிக்கும். இறை அனுபவம் இன்பம் தர வல்லது என்பது, ‘தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து’ என்பதால் புலனாகிறது.

இதனால், இறைவனே வினையை நீக்கி இன்பந்தர வல்லான் என்பது கூறப்பட்டது.

14

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்
தந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.

பதப்பொருள் : தக்கன்தன் வேள்வியினில் - தக்கன் செய்த யாகத்தில், சந்திரனைத் தேய்த்தருளி - சந்திரனை நிலத்துத் தேய்த்தருளி, இந்திரனைத் தோள் நெரித்திட்டு - இந்திரன் தோளை நெரியும்படி தாக்கி, எச்சன் தலை அரிந்து - யாகத்தேவனின் தலையை அறுத்து, அந்தரமே செல்லு - வானிலே செல்லும் இயல்புள்ள, அலர்கதிரோன் - பரந்த கிரணங்களை யுடைய சூரியனது, பல் தகர்த்து - பல்லை உடைத்து, தேவர்களை திசை திசையே சிந்தி - மற்றைத் தேவர்களைத் திக்குகள்தோறும் சிதறி, ஓட்டுகந்த - ஓடும்படி செய்தலை விரும்பிய, செந்தார் - செம்மையாகிய மாலையை அணிந்த, பொழில் புடை சூழ் - சோலைகள் பக்கத்திலே சூழப்பெற்ற, தென்னன் பெருந்துறையான் - அழகிய நல்ல திருப்பெருந்