315


விளக்கம் : இறைவனைச் செம்மையாக நினைத்தால் இன்பம் உண்டாம் என்பார், ‘சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரன்’ என்றார். ‘’மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்றென்னுள் எழுபரஞ் சோதி’’ என்று இறையனுபவம் இன்பம் தர வல்லது என்பதை அடிகள் பின்னர்க் கோயிற்றிருப்பதிகத்தில் கூறுவார். ஆனால், ஒட்டாத பாவிகளை எண்ணினால் துன்பம் உண்டாம் என்பார், ‘ஒட்டாத பாவித்தொழும்பரை நாம் உருவறியோம்’ என்று ஒதுக்கித் தள்ளினார்.

இதனால், இறை அனுபவம் இன்பந்தர வல்லது என்பது கூறப்பட்டது.

7

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! ஒன்றாய் முளைத்தெழுந்து - ஒரு பொருளாய் முறைத்துத் தோன்றி, எத்தனையோ கவடுவிட்டு - எத்தனையோ கிளைகளாக விரிந்து, என்னை - அடியேனை, நன்றாக வைத்து - நன்மை உண்டாக வைத்து, நாய் சிவிகை ஏற்றுவித்த - நாயைச் சிவிகையில் ஏற்றினாற்போலச் சிறப்புச் செய்த, என் தாதை தாதைக்கும் - என் பாட்டனுக்கும், எம் அனைக்கும் - எம் தாய்க்கும், பெருமான் - தலைவனாகிய, குன்றாத செல்வற்கே - குறைவு படாத செல்வமுடையானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : இறைவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை ஆதலால், ‘ஒன்றாய் முளைத்தெழுந்து’ என்றும், அவன் உலகங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்றலால், ‘எத்தனையோ கவடுவிட்டு’ என்றும் கூறினார். ‘எம் அனை’ என்றது உமையம்மையைக் குறிக்கும் என்பாருமுளர். சென்றடையாத திருவுடையானாதலின் இறைவன், குன்றாத செல்வனாயினான்.

இதனால், இறைவனது முதன்மை கூறப்பட்டது.

8

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! கரணங்கள் எல்லாம் - கருவிகள் எல்லாவற்றிற்கும், கடந்து நின்ற - அப்பாற் பட்ட, கறைமிடற்றன் - நஞ்சு பொருந்திய கண்டத்தை