348


‘நூலுணர்வுணரா நுண்ணியேன்’ என்றது காண்க. ‘நம்பனையும் அறியா’ என்று கூட்டிப் பொருள் கொள்ளப்பட்ட்து. மற்றைய தேவர்களை அறிந்தது போலச் சிவபெருமானையும் அளவிட்டு அறிய முயன்ற வேதங்கள், அவ்வாறு அறிய முடியாமல் ஏத்தி நின்றன என்பதாம்.

இதனால், இறைவன் நூலறிவுக்கு அப்பாற்பட்டவன் என்பது கூறப்பட்டது.

17

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, சலம் உடைய - கோபமுடைய, சலந்தரன்தன் உடல் - சலந்தராசுரனது உடலை, தடிந்த - அழித்த, நல் ஆழி - நல்ல சக்கரப்படையை, நலம் உடைய நாரணற்கு - நலம் மிக்க திருமாலுக்கு, அன்று அருளிய ஆறு - அக்காலத்தில் கொடுத்தருளிய காரணம், என் - என்ன?

நலம் உடைய நாரணன் - நலம் மிக்க திருமால், தன் நயனம் இடந்து - தன் கண்ணைத் தோண்டி எடுத்து, அரன் அடிக்கீழ் - சிவபெருமானது திருவடியின்மேல், அலர் ஆக இட - மலராக அர்ச்சிக்க, ஆழி அருளினன் - அவ்வன்பிற்கு மகிழ்ந்து சக்கரப் படையைக் கொடுத்தருளினன்.

விளக்கம் : கிடைத்தற்கரிய நல்ல படைக்கலத்தை அதன் பெருமையறியாது பிறருக்குக் கொடுத்தவன் தலைவன் ஆவனோ என வினவுவாள், ‘நல்லாழி நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடி’ என்றாள்.

சிவபெருமான் சலந்தரன் உடலைத் தடிந்தது :

சலந்தராசுரன் என்பான் பிரமன் திருமால் முதலிய தேவர்களை எல்லாம் வென்று செருக்குற்றுச் சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டுமென்று புறப்பட்டான். அவன் மனைவியாகிய விருந்தை தடுக்கவும் கேளாது கயிலையை அடைந்தான். அதனையறிந்த சிவபெருமான் விருத்த வேதியனாய் எதிர்ப்பட்டுப் பூமியிலொரு வட்ட வடிவமாகக் கோட்டைக் கிழித்து, அதற்குட்பட்ட பகுதியைப் பெயர்த்து எடு என்று சொல்ல, அப்பகுதியே சக்கரப் படையாய்ச் சலந்தராசுரனைக் கொன்று சென்றது, (கந்தபுராணம்)

நாரணன் நயனம் இடந்தது :

திருமால் இறைவனை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட்டு வரும் நாளில் ஒரு நாள் ஒரு பூக்குறைய,