371


கொடைமடம் என்பர் சங்கச்சான்றோர். 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்' என்ற திருப் பல்லாண்டைக் காண்க. மக்களைப் பெற்றார்க்கே மக்களின் அருமை தெரியும் என்பதை, 'குமரன்தன் தாதை' என்பதால் குறிப்பிட்டார்.

பாலகனார்க்குப் பாற்கடல் ஈந்த வரலாறு :

வசிட்டர் ஆசிரமத்தில் காமதேனுவின் பாலைக் குறைவற உண்டு வளர்ந்து வந்த உபமன்னியாராகிய குழந்தையைப் பிதாவாகிய வியாக்கிரபாதர் சிதம்பரத்திலுள்ள தமது ஆசிரமத்தில் கொண்டுவந்து வளர்க்கும் போது ஒரு நாள் அக்குழந்தை பசியால் பாலுக்கு அழுதபோது அதன் பசியைத் தீர்க்கும்பொருட்டுச் சிவபெருமான் திருப்பாற்கடலை அங்கு வர அருளினான் (கோயிற்புராணம்). கொடைச் சிறப்பாதலின், அதுவும் திருவருள் வெற்றியாம்.

இதனால், இறைவனது வள்ளல் தன்மை கூறப்பட்டது.

17

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

பதப்பொருள் : நல்ல மலரின்மேல் - அழகிய தாமரை மலரின்மேல் உள்ள, நான்முகனார் தலை - பிரமனுடைய தலையை, அரிந்தது - சிவபொருமான் அரிந்தது, ஒல்லை - விரைவாக என்றும், அரிந்தது - அவ்வாறு அரிந்தது, உகிரால் என்று - நகத்தால் என்றும் கூறி, உந்தீபற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : நான்முகனார் என்பதில் ஆர் விகுதி இழிவின்கண் வந்தது. தாமரையினும் சிறந்த மலரின்மையால் அதனை 'நல்ல மலர்' என்றார். இறைவனது ஆற்றலைக் காட்டுவார் 'உகிரால் அரிந்தது' என்றார். இவ்வரலாறு திருப்பொற்சுண்ணத்தில் கூறப்பட்டது.

இதனால், இறைவன் உயிர்களது செருக்கை அடக்க வல்லவன் என்பது கூறப்பட்டது.

18

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இருபதும் இற்றதென றுந்தீபற.

பதப்பொருள் : தேரை நிறுத்தி - தனது புட்பக விமானத்தை நிறுத்திவிட்டு, மலை எடுத்தான் - கயிலாய மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனுடைய, சிரம் ஈரைந்தும் - தலைகள் பத்தும், இற்ற ஆறு - நெரிந்த விதத்தைப் பாடியும், இருபதும் - தோள்கள் இருபதும், இற்றது என்று - நெரிந்தது என்று பாடியும், உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : இராவணன் மலை எடுத்தது: