388


அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பதப்பொருள் : பூண் - அணிகளை அணிந்த, பொன் ஒத்த - பொன்னை நிகர்த்த, முலையீர் - தனங்களையுடைய பெண்களே, உன்னற்கு அரிய - நினைத்தற்கரிய, திருவுத்தர கோசமங்கை - திருவுத்தரகோச மங்கையில், மன்னி - நிலைபெற்று பொலிந்திருந்த - விளங்குகின்ற, மாமறையோன் - பெருமையுள்ள வேதியனும், தன் புகழே - தனது புகழினையே, பன்னி - பலகாலும் சொல்லி, பணிந்து இறைஞ்ச - தாழ்ந்து வணங்க, பாவங்கள் - பாவங்களின், பற்று அறுப்பான் - பிடிப்பை ஒழிப்பவனும், என் அத்தன் - என் அப்பனும், என்னையும் ஆட்கொண்டான் - என்னையும் ஒரு பொருளாக அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, எழில் பாடி - அழகினைப் பாடி, அன்னத்தின்மேல் ஏறி ஆடும் - அன்னப்பறவையின்மீது ஏறி ஆடுகின்ற, அணி மயில் போல் - அழகிய மயிலைப்போன்று, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி இருந்து ஆடுவோம்.

விளக்கம் : சுணங்கு பூத்த தனங்கட்குப் பொன்னை உவமை கூறினார் என்க. 'உன்னற்கரிய' என்றதனால், உத்தரகோச மங்கையின் சிறப்பு விளங்கிற்று என்க. இறைவனது பொருள்சேர் புகழை இடைவிடாது பாடினால், பற்றி நின்ற பாவத் தொடர்புகளை அறுப்பான் என்பார், 'தன் புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்' என்றார். 'பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டின்' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க. அன்னம் ஊஞ்சலுக்கும், அணிமயில் அதில் ஆடும் பெண்களுக்கும் உவமை. ஊஞ்சல் மெல்லென அசையும் தன்மையுடைமை பற்றி, அதற்கு அசையும் நடையை உடைய அன்னம் உவமையாயிற்று. இனி, 'மயில் போல் அத்தன்' என்று இயைத்து, 'வெள்விடையின்மேல் செம்மையான நிறத்துடன் அம்பிகையோடு வரும் அத்தன்' என்று பொருள் கூறுவாரும் உளர். இதற்கு, 'மணிமயில்' என்று பிரித்தல் வேண்டும். மணி - மாணிக்கம்.

இதனால், இறைவனது அழகைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

7

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலில் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந்திரு வுத்தர கோசமங்கை
மாலுக் கரியாணை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.