489


‘ஆரமுதே’ என்றதால் குறித்தார். உள்குவார் மனத்தில் உறுசுவையளிக்கும் பெருமான் தமக்கும் அருள வேண்டும் என்பது குறிப்பு.

இதனால், இறைவன் உள்ளொளியாகிய இன்பத்தை நல்குபவன் என்பது கூறப்பட்டது.

6

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : மெய்யனே - மெய்ப்பொருளானவனே, விகிர்தா - வேறு வேறு வடிவம் கொள்பவனே, மேருவே - மகாமேரு மலையையே, வில்லா - வில்லாகக் கொண்டு, மேவலர் புரங்கள் மூன்று - பகைவரது கோட்டை மூன்றையும், எரித்த - எரித்து நீறாக்கின, கையனே - கையையுடையவனே, காலால் - திருவடியால், காலனைக் காய்ந்த - எமனை உதைத்துக் கடிந்த, கடுந்தழல் பிழம்பு அன்ன மேனி - கடுமையான தீத்திரள் போன்ற உடல், செய்யனே - செந்நிறமுடையவனே, செல்வத் திருப்பெருந் துறையில் - செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்த மர நிழலைப் பொருந்திய, சீர் ஐயனே - சிறப்புடைய தலைவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

விளக்கம் : மேருவை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தமையால், கையின் பெருமையையும், கடவூரில் காலனைக் காய்ந்து மார்க்கண்டரைக் காத்தமையால், திருவடியின் பெருமையையும் கூறினார். இனி, ‘கடுந்தழற் பிழம்பன்ன மேனி’ என்றதால், நெருப்பைப் போன்று அணைந்தாரைத் தூய்மை செய்து காக்க வல்லது என்று திருமேனியின் பெருமையையும் குறிப்பால் உணர்த்தினார். ‘மாசுகளைப் போக்கித் தூய்மை செய்ய வேண்டும்’ என்பதாம்.

இதனால், இறைவனது ஆற்றல் கூறப்பட்டது.

7

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யுஞ்