509


மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானெனதென் றியாது மின்றி அறுதலே.

பதப்பொருள் : காவி சேரும் - நீல மலரின் தன்மையமைந்த, கயல் கண்ணாள் - மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின், பங்கா - பாகனே, மேவும் - பொருந்திய, உன்றன் அடியாருள் - உன்னுடைய அடியார் நடுவில் ஒருவனாய், யானும் - நானும், மெய்ம்மையே விரும்பி - உண்மைமையே விரும்பி, உன்றன் கருணையினால் - உன்னுடைய திருவருளால், பரமானந்தம் - பேரின்பமாகிய, பழங்கடல் சேர்ந்து - பழைய கடலை அடைந்து, ஆவி யாக்கை - உயிரும் உடம்பும், யான் எனது என்ற - நான் எனது என்னும் பற்றுகளும், யாதும் இன்றி அறுதல் - சிறிதுமில்லாது அற்றுப் போதல், பரவியேற்கும் உண்டாமோ - பாவியாகிய எனக்கும் உண்டாகுமோ?

விளக்கம் : 'யானும் மெய்ம்மையே விரும்பி' என மாற்றிக் கொள்க. மேவும் அடியார் என்றது முன்னமே இறைவனைச் சேர்ந்த அடியாரை என்றதாம். பரமானந்தக்கடல் என்பது பேரின்பம் பெற்றிருத்தலைக் குறித்தது. 'அடியார் நடுவுள் பேரின்பம் பெற்றுப் பற்றொன்றின்றியிருத்தல் அடியேனுக்கும் உண்டாமோ? என்று வேண்டியபடியாம்.

இதனால், இறைவன் திருவருளோடு கூடியிருக்கிறான் என்பது கூறப்பட்டது.

5

அறவே பெற்றார் நின்அன்பர் அந்தம் இன்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே.

பதப்பொருள் : உடையானே - உடையவனே, நின் அன்பர் - உன் அன்பர்கள், பேரா - நிலை பெயராத, ஒழியா - நீங்காத, பிரிவு இல்லா - வேறுபடாத, மறவா நினையா - மறப்பும் நினைப்பும் இல்லாத, அளவிலா - எல்லையில்லாத, மாளா - அழிவு இல்லாத, இன்பமாகடல் - பேரின்பக்கடலை, அறவே பெற்றார் - முற்றிலும் பெற்றவர்களாய், அந்தம் இன்றி அகநெகவும் - முடிவின்றி மனம் உருகவும், புலைநாயேன் - கீழ்த்தன்மையுடைய நாய் போன்ற யான், புறமே கிடந்து - அவர்கள் கூட்டத்துக்கு வெளியே கிடந்து, புலம்புகின்றேன் - வருந்துகின்றேன்; ஆகையால், மெய் அன்பு பெறவே வேண்டும் - அவ்வின்பக் கடலைப் பெறுவதற்கு ஏதுவான உண்மை அன்பை யான் பெறவே வேண்டும்.

விளக்கம் : கடல், நிலை மாறக்கூடியது; விட்டு நீங்கக்கூடியது; வேறாய் நிற்பது; மறத்தற்குரியது; நினைத்தற்குரியது; அளவுபட்டது;