534


புரண்டிடினும் அஞ்சேன் - தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன்; தோள் உலாம் நீற்றன் - தோல்களில் விளங்குகின்ற திரு வெண்ணீற்றையுடையவனும், ஏற்றன் - காளையை ஊர்தியாக உடையவனும், சொல் பதம் கடந்த அப்பன் - சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது, தாள் தாமரைகள் - திருவடித் தாமரைகளை, ஏத்தி - துதித்து, தடமலர் புனைந்து - பெருமை பொருந்திய மலர்களைச் சாத்தி, நையும் - மனம் உருகுகின்ற, ஆள் அலாதவரைக் கண்டால் - அடிமைகள் அல்லாதவர்களைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் : கையில் அனலேந்தி எரியாடுபவனும் என்றும் அழிவில்லாதவனுமாகிய பெருமானுக்கு ஆட்பட்ட அடியார்கள் நெருப்பிற்கும் உலகத்தின் அழிவிற்கும் அஞ்ச வேண்டுவதில்லை என்பதாம். அத்தகைய இறைவனை மலர்தூவி வழிபடாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தடமலர் புனைந்து நையும் ஆளலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், சிவபெருமானை மலர் தூவி வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.

6

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்துள் ஆடும்
முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள் : தகைவு இலா - தவிர்க்க முடியாத, பழியும் அஞ்சேன் - பழிக்கும் அஞ்ச மாட்டேன்; சாதலை முன்னம் அஞ்சேன் - இறத்தலை முதலாவதாக அஞ்ச மாட்டேன்; புகைமுகந்த எரி - புகையைக் கொண்ட நெருப்பை, கை வீசி - கையிலே ஏந்தி வீசிக்கொண்டு, பொலிந்த - விளங்குகின்ற, அம்பலத்துள் ஆடும் - பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, முகை - அரும்பு, நகை - மலர்கின்ற, கொன்றை மாலை - கொன்றை மாலையை அணிந்த, முன்னவன் - முதல்வனது, பாதம் ஏத்தி - திருவடியைத் துதித்து, அகம் நெகாதவரைக் கண்டால் - மனம் நெகிழாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் : தம்மேல் பழி சொல்வோர், உண்மையை உணராதவராதலின், பொருட்படுத்த வேண்டுவதில்லை என்பார், 'தகைவிலாப் பழியும் அஞ்சேன்' என்றார். சாதல் என்பது உடம்பினின்றும் உயிர் பிரிதலாம். உடம்பினின்றும் உயிரைத் தனித்துக் காணும் தன்மையுடையோர் சாதலுக்கு அஞ்ச வேண்டுவதில்லையாதலின், 'சாதலை அஞ்சேன்' என்றார். எல்லா