585


எத்த னாகிவந் தில்புகுந்தெமை
ஆளும் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.

பதப்பொருள் : தில்லை மூதூர் நடம் செய்வான் - தில்லையாகிய பழைமையான பதியிலே நிருத்தம் புரிபவனும், பராபரன் - மிகவும் மேலானவனும் ஆகிய, சித்தர் சூழ் அச்சிவபிரான் - சித்தர்கள் சூழ்ந்து வணங்கும் அந்தச் சிவபெருமான், பத்தர் சூழ - அடியார் புடை சூழ, பாரில் வந்து - பூமியில் வந்து, பார்ப்பான் என - அந்தணக் கோலத்தோடு, எத்தனாகி வந்து - ஏமாற்றுபவனாய் வந்து, இல் புகுந்து - எங்கள் வீடுகளில் புகுந்து, எமை ஆளும் கொண்டு - எம்மை அடிமை கொண்டு, எம் பணி கொள்வான் - எமது தொண்டினை ஏற்றுக்கொள்ளும்படியாக, வைத்த - சூட்டிய, மாமலர் - சிறந்த தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலை பெற்று நின்று, மலரும் - பொலிவு பெற்று விளங்கும்.

விளக்கம் : தில்லை மூதூரிலே எழுந்தருளிய பெருமான் திருப்பெருந்துறையிலே அந்தண வடிவோடு அடியார் புடை சூழத் தம்மையாட்கொண்டதை வியந்து கூறுவார், 'தில்லை மூதூர் நடஞ்செய்வான் பார்ப்பான் எனப் பாரில் வந்து' என்றார். 'இல் புகுந்து' என்றது, இறைவன் தன் அடியார்களை அவர்கள் இல்லங்களில் சென்றும் ஆட்கொள்வான் என்றதாம். 'இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி' என்று திருவெம்பாவையில் கூறியிருத்தலையும் காண்க. 'பணி கொள்வான்,' வினையெச்சம். அவன் தாளை வணங்குதற்கும் அவன் அருள் வேண்டும் என்றபடி.

இதனால், இறைவன் அடியார்களை ஆட்கொள்ளும் திறம் கூறப்பட்டது.

4

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்அமு தூறஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பதப்பொருள் : மாய வாழ்க்கையை - பொய்யான உலக வாழ்க்கையை, மெய்யென்று எண்ணி - உண்மையானது என்று நினைத்து, மதித்திடா வகை - அதனைப் பாராட்டாதபடி, நல்கினான் - எமக்கு ஞானத்தைக் கொடுத்தவனும், வேய -