609


பதப்பொருள் : (அடியார்களே!) மிக - மேன்மைப்படுவதற்கு, இனி ஓர் காலம் இல்லை - இனிமேல் ஒரு காலம் கிடையாது; ஆகையால், அணியார் கதவு அடையாமே - சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி, வெகுளி - கோபத்தையும், வேட்கை நோய் - காம நோயையும், விடுமின் - விட்டுவிடுங்கள், உடையான் அடிக்கீழ் - நம்மை உடைய பெருமானது திருவடிக்கீழ், பெருஞ்சாத்தோடு - பெரிய கூட்டத்தோடு, உடன் போவதற்கே ஒருப்படுமின் - உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள், புயங்கன் - பாம்பை அணிந்தவனும், ஆள்வான் - நம்மை ஆள்பவனுமாகிய இறைவனது, புகழ்களை - பெருமைகளை, புடைபட்டு - எங்கும் சூழ்ந்து, உருகிப் போற்றுவோம் - மனமுருகிப் போற்றுவோம்; போற்றினால், சிவபுரத்துள் - சிவலோகத்தில், நாம் போய் அடைவோம் - நாம் போய்ச் சேர்ந்துவிடுவோம்.

விளக்கம் : சினமும் ஆசையும் சிவலோகத்தை அடையத் தடையாதலின், 'கதவதடையாமே விடுமின் வெகுளி வேட்கை நோய்' என்றார். வாய்ப்பு உள்ளபோதே பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாதலின், 'மிக ஓர் காலம் இனியில்லை' என்றார். கதவு அடையாதிருத்தலாவது, திருவருள் பெருகியிருத்தல். தாம் மட்டும் பயன் பெற விரும்பாதவர் ஆதலின், 'பெருஞ்சாத்தோ டுடன்போவதற்கே ஒருப்படுமின்' என்று எல்லோரையும் அழைக்கிறார்.

இதனால், இறைவன் திருவடி சேர்வதற்குக் காலம் தாழ்த்தலாகாது என்பது கூறப்பட்டது.

5

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே.

பதப்பொருள் : (அடியார்களே!) நாம் - நாம், இனி -இனிமேல், ஒர் இடையூறு அடையாமே - ஒரு துன்பம் வந்து சேராவண்ணம், திகழும் - விளங்குகின்ற, சீர் ஆர் - சிறப்பு அமைந்த, சிவபுரத்துச் சென்று - சிவபுரத்துக்குப் போய், சிவன் தாள் வணங்கி - சிவபெருமானது திருவடியை வணங்கி, நிகழும் - அங்கே வாழும், அடியார் முன் சென்று - அடியார் முன்னே சென்று, நெஞ்சம் உருகி நிற்போம் - மனம் உருகி நிற்போம்; அதற்கு, புயங்கள் தாளே - பாம்பணிந்த பெருமானது திருவடியையே, புகழ்மின் - புகழுங்கள், தொழுமின் - வணங்குங்கள், பூப்புனைமின் - அவற்றுக்கு மலர்சூடுங்கள், புந்தி வைத்திட்டு - அதனையே நினைவில்