629


ஆளும் தன்மைகளை, பாடுதும் ஆகாதே - பாடுதல் ஆகாது போகுமோ? விண் களிகூர்வது - விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க, ஓர் வேதகம் வந்து - ஒரு மாற்றம் வந்து, வெளிப்படும் ஆகாதே - தோன்றுதல் ஆகாது போகுமோ?

விளக்கம் : 'ஆகாதே' என்பதிலுள்ள ஏகாரம் எதிர்மறை, கேவேடனாகிக் கெளிற்று மீனைப் பிடித்த இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவானாயின், எல்லாம் ஆகும் என்றபடி. வலைஞர், கேவேடர் எனப்படுதல் பற்றி, 'வேடர்' என்பார,் 'கானவன்' என்றார். இறைவன் மீன் வலை வீசியதைக் கீர்த்தித் திருவகவலிற் காண்க.

வேதகம் என்பது வேறுபடுத்துவது; இங்குச் சீவனைச் சிவமாக்குதலைக் குறித்தது. 'கடைப்படும்' முதலிய செய்யுமென்னும் வினைமுற்றுகள் தொழிற்பெயராய் நின்றன. மறந்திடும் முதலியவற்றிற்கும் இவ்வாறே கொள்க. வணங்குவதும் என்பது, 'வணங்குதும்' எனத் தொகுத்தலாய் வந்தது.

இதனால், இறைவன் தோற்றத்தைக் கண்டவர்க்குத் துன்பம் நீங்கி இன்பம் உணடாகும் என்பது கூறப்பட்டது.

1

ஒன்றினொ டென்றுமொ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யாரடி யாரடி யோமென உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.

பதப்பொருள் : ஏறு உடையான் - இடப வாகனத்தையுடையவனும், எனை ஆளுடை நாயகன் - என்னை அடிமையாகவுடைய தலைவனுமாகிய சிவபெருமான், என்னுள் புகுந்திடில் - என்னுள்ளே புகுவானாயின், ஒன்றினொடு ஒன்றும் - உயிரோடு உடம்பும், ஓல் ஐந்தினொடு ஐந்தும் - ஒப்பற்ற ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும், உயிர்ப்பு - கலந்து உயிர்க்கும் தன்மை, அறும் ஆகாதே - அறுதல் ஆகாது போகுமோ? உன் அடியார் அடியார் - இறைவனே உன் அடியார் அடியார்க்கு, அடியோம் என - அடியோம் என்று சொல்லி, உய்ந்தன ஆகாதே - துன்பங்கள் பலவும் நீங்குதல் ஆகாது போகுமே, கன்றை நினைந்து எழு - கன்றை எண்ணி எழுகின்ற, தாய் என - தாய்ப் பசுவைப் போல, வந்து - இறைவன் முன்வந்து உருகுகின்ற, கணக்கது ஆகாதே - தன்மை ஆகாது போகுமோ? காரணம் ஆகும் - எல்லாச்செயல்களுக்கும் காரணமாகிய, அனாதிகுணங்கள் - இறைவனது