631


உண்டாகும் மாறுபட்ட குணங்கள், பறிந்து - நீங்கி, மறிந்திடும் ஆகாதே - ஒழிந்திடுதல் ஆகாது போகுமோ? பாவனை ஆய கருத்தினில் வந்த - பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற, பரா அமுது ஆகாதே - மேலான அமுதம் ஆகாது போகுமோ? அந்தம் இலாத அகண்டமும் - எல்லையில்லாத உலகப் பொருளும், நம்முள் - நமது உள்ளத்தில், அகப்படும் ஆகாதே - அகப்படுதல் ஆகாது போகுமோ? ஆதிமுதல் பரம் ஆய பரஞ்சுடர் - எல்லாவற்றுக்கும் முதலாய மேலான பரஞ்சுடர், அண்ணுவது ஆகாதே - நெருங்குவழி ஆகாது போகுமோ? செந்துவர் வாய் - மிகச் சிவந்த வாயினையுடைய, மடவார் இடர் ஆனவை - பெண்களால் வரும் துன்பங்களானவை, சிந்திடும் ஆகாதே - ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் அன கண்கள் - சேல் மீன் போன்ற எம் கண்கள் அவன் திருமேனி - அவனது திருமேனியழகில். திளைப்பன ஆகாதே - ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர ஞாலம் - இந்திரசாலம் போன்ற, இடர்ப் பிறவித்துயர் - மயக்குகின்ற பிறவித் துன்பம், ஏகுவது ஆகாதே - ஒழிதல் ஆகாது போகுமோ?

விளக்கம் : சத்தாகிய பதியின் முன்னர் அசத்தாகிய பாசங்கள் நில்லாவாதலின், 'பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடுமாகாதே' என்றார். இது, ஒளியின் முன் இருள் நில்லாதவாறு போல என்க. இனி, பாசம் நீங்கிப் பதியைத் தியானிக்கில் இன்பம் ஊறுமாதலின், 'பாவனையாய கருத்தினில் வந்த பராஅமுதாகாதே' என்றார், 'சேலான கண்கள் அவன் திருமேனி திளைப்பன' என்றது அகப்பொருட்குறிப்பு. இந்திர ஞாலம் - கண்கட்டு வித்தை. கணப்பொழுதில் பொருளைத் தோற்றி மறைப்பது இவ்வித்தையாலாகும். அதைப் போன்று கணப்பொழுதில் தோன்றி மறையக்கூடியது பிறவியாதலின், 'இந்திரஞால இடர்ப்பிறவி' என்றார்.

இதனால், இறைவன் எதிர்ப்படுவானாயின் பிறவித்துன்பம் நீங்கும் என்பது கூறப்பட்டது.

3

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியல் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே.

பதப்பொருள் : என்னை உடைப்பெருமான் - என்னை ஆளாக உடைய பெருமானும், அருள் ஈசன் - அருளுகின்ற ஈசனும் ஆகிய இறைவன். எழுந்தருளப் பெறில் - எழுந்தருளி வரப்பெற்றால், என்