| தொடக்கம் | ||
| 57. திருவேற்காடு - பழந்தக்கராகம்
|
||
| 612. |
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி வெள்ளியான் உறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில் தெள்ளியார்; அவர் தேவரே. |
உரை |
| 613. |
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர் வேடம் கொண்டவன் வேற்காடு பாடியும் பணிந்தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே. |
உரை |
| 614. |
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி, வேதவித்தகன், வேற்காடு, போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே. |
உரை |
| 615. |
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன், வீழ்சடையினன், வேற்காடு, தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட, பாழ்படும், அவர் பாவமே. |
உரை |
| 616. |
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை வேற்காடு பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார், வினை ஒல்லையே. |
உரை |
| 617. |
தோலினால் உடை மேவ வல்லான், சுடர் வேலினான், உறை வேற்காடு நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர், மாலினார், வினை மாயுமே. |
உரை |
| 618. |
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் வில்லினான் உறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர், தீர்க்கமே. |
உரை |
| 619. |
மூரல் வெண் மதி சூடும் முடி உடை வீரன் மேவிய வேற்காடு வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர் சேர்வர், செய் கழல்; திண்ணமே. |
உரை |
| 620. |
பரக்கினார் படு வெண் தலையில் பலி விரக்கினான் உறை வேற் காட்டூர், அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை நெருக்கினானை நினைமினே! |
உரை |
| 621. |
மாறு இலா மலரானொடு மால் அவன் வேறு அலான் உறை வேற்காடு ஈறு இலா மொழியே மொழியா எழில் கூறினார்க்கு இல்லை, குற்றமே. |
உரை |
| 622. |
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு கண்டு, நம்பன் கழல் பேணி, சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாட, குணம் ஆமே. |
உரை |