| 1886. | அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், 
      அழகன்(ன்) உறை 
      கா அனைத்தும், துறைகள்
 எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம்
 மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும்,
 மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும்(ம்)
 இடம் ஆகிய பாழிமூன்றும்,
 சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள்
 ஆயின தேய்ந்து அறவே!
 | 3 |