| 2370. | எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, 
      முயல்வு உற்ற சிந்தை முடுகி,
 பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற
 பாதர் பதிதான்
 மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய,
 வாளை குழுமிக்
 குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன
 வளர்கின்ற கொச்சைவயமே.
 | 4 |