| 2395. | வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் 
      இருந்து, மடவாள் 
      தனோடும் உடன் ஆய்,
 வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் உளமே
 புகுந்த அதனால்
 ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடர் ஆன
 வந்து 
      நலியா;
 ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
 அவர்க்கு மிகவே.
 | 8 |