| 2400. | ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற 
      பிணி நோய் ஒருங்கும் உயரும்
 வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன
 வேத விகிர்தன்,
 கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான்,
 இலங்கு முடிமேல்
 தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு
 நாரையூர் 
      கைதொழவே.
 | 2 |