| 2401. | ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், 
      துயர் உற்ற தீங்கு விரவி,
 பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
 உற்ற வண்ணம், அகலும்
 போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
 வான் உளோர்கள் புணரும்
 தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
 நாரையூர் கைதொழவே.
 | 3 |