| 2416. | ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் 
      அவை ஆர, ஆடல் அரவம்
 மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
 விடம் கொள் மிடறன்
 துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
 ஆர, வென்றி அருளும்,
 நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
 நம்பன் அவனே.
 | 7 |