2552. உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
                                                     அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.
3
உரை