| 2579. | இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன் எழில் 
      கொள் வெற்பு எடுத்து, அன்று,
 கலங்கச் செய்தலும், கண்டு, தம் கழல் அடி நெரிய வைத்து,
 அருள் செய்தார்
 புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல் மன்று அதன்
 இடைப் புகுந்து ஆரும்,
 குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ, வினை
 குறுகாவே.
 | 8 |