| 2619. | கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; 
      அறத்திறம் முனிவர்க்கு அன்று
 இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது
 அருள் பெருமானார்;
 மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து,
 அருங்கானத்து,
 அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம்
 அறியோமே!
 | 4 |