| 2631. | நல்லர், ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் 
      தம் அடைந்தவர்க்கு அருள் ஈய
 வல்லர், பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர், மலி கடல்
 மாதோட்டத்து
 எல்லை இல் புகழ் எந்தை, கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து
 ஏத்தி,
 அல்லல் ஆசு அறுத்து, அரன் அடி இணை தொழும்
 அன்பர் ஆம் அடியாரே.
 | 5 |