| 2671. | வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு 
      கோவண உடைமேல் ஓர்
 பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல
 கடைதொறும் பலி தேர்வார்;
 சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர்
 வண்ணர் தம் அடி பரவ,
 வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள்
 வருவாரே.
 | 2 |