| 2677. | கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்; வீணையர்; தாமும் அஃதே;
 எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார்
 உறைவது ஒர் இடம் வினவில்,
 பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி
 எதிர் கொணர்ந்து பெய்ய,
 வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
 வருவாரே.
 | 8 |