2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று - காந்தாரம்
 
2256. விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
                                                     மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
                                                  புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
                                             கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
                                           எறிவித்த இறைவன் ஊரே.
1
உரை
   
2257. திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன் ஊர்,
                                              அயன் ஊர், தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன் ஊர், காழி, தகு
                                                 சண்பை, ஒண் பா
உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம்
                                                   உயர்ந்த தேவர்
வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள்
                                       கண்டத்தோன் விரும்பும் ஊரே.
2
உரை
   
2258. வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய்,
                                                சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி இறை
                                              கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய
                                  மிக்க(அ)யன் ஊர், அமரர்கோன் ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குரு அது அரன் நாளும்
                                                     அமரும் ஊரே.
3
உரை
   
2259. மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப் புகலி, தராய்,
                                                 தோணிபுரம், வான்
சேம மதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை,
                                             தேவேந்திரன் ஊர், சீர்ப்
பூமகன் ஊர், பொலிவு உடைய புறவம், விறல் சிலம்பன்
                                                 ஊர், காழி, சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து, அவற்றின் பயன்
                                            நுகர்வோர் பரவும் ஊரே.
4
உரை
   
2260. தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம் கொச்சை,
                                                    தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன் ஊர்,
                         விண்ணவர் தம் கோன் ஊர், வென்றித்
திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு
                                                   தோணிபுரம், சீர்
உரை சேர் பூந்தராய், சிலம்பன் ஊர், புறவம் உலகத்தில்
                                                    உயர்ந்த ஊரே.
5
உரை
   
2261. புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்
                                                     காழி, சண்பை,
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி, பூந்தராய்,
                                                   தோணிபுரம், சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,
                                   வானவர் தம் கோன் ஊர்,
அண்டு அயன் ஊர், இவை என்பர் அருங்கூற்றை
                              உதைத்து உகந்த அப்பன் ஊரே.
6
உரை
   
2262. வண்மை வளர் வரத்து அயன் ஊர், வானவர் தம் கோன்
                                            ஊர், வண் புகலி, இஞ்சி
வெண் மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை,
                                              வியன்காழி, கொச்சை,
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம்,
                                                    பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார் புகழ் புறவம் பால்வண்ணன்
                                                     பயிலும் ஊரே.
7
உரை
   
2263. மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பன் ஊர்,
                                                    காழிமூதூர்,
நீடு இயலும் சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம்,
                                                    கமலம் நீடு
கூடிய(அ)யன் ஊர், வளர் வெங்குரு, புகலி, தராய்,
                                    தோணிபுரம் கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற
                                      மலைச்சிலையன் ஊரே.
8
உரை
   
2264. இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம், பூந்தராய்,
                                                  சிலம்பன்தன் ஊர்,
நிரக்க வருபுனல் புறவம், நின்ற தவத்து அயன் ஊர், சீர்த்
                                                 தேவர்கோன் ஊர்,
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசு இலாச் சண்பை, காழி,
                                                         கொச்சை,
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர்
                                               வேதம் அறாத ஊரே.
9
உரை
   
2265. மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை,
                                    இந்திரன் ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன் ஊர், நுண் அறிவார் குரு, புகலி,
                                          தராய், தூ நீர்மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பன் ஊர்,
                                        செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை
                                  மண்ணோர் வாழ்த்தும் ஊரே.
10
உரை
   
2266. ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
                                           கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
                                                புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
                                               வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
                                                    தங்கும் ஊரே.
11
உரை
   
2267. அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம்,
                                            அணி நீர்ப் பொய்கைப்
புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன் ஊர், புகழ்க் காழி,
                                              சண்பை, தொல் ஊர்
மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சை வயம், வேணுபுரம்,
                                              அயன் ஊர், மேல் இச்
சக்கரம் சீர்த் தமிழ்விரகன் தான் சொன்ன தமிழ்
                                        தரிப்போர் தவம் செய்தோரே.
12
உரை